Please specify the group
3:47 am - Friday November 15, 2024

Buy Domain!... Get Website Free!... Contact madurai360.in@gmail.com

Coconut Uses and Benefits (தேங்காயின் பயன்கள் & மருத்துவ குணங்கள்)

Coconut Uses Benefits and Medicine

Coconut Uses Benefits and Medicine


 

இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்…
 

 

  • தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
  • சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.
  • அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.
  • ‘லாவுரிக் ஆசிட்’ எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.
  • தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்கும் நொதிகளாகும்.
  • தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள ்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.
  • தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.
  • பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும் , உடல் புத்துணர்ச்சிக் கும் அவசியமானவையாகும்.
  • தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.
  • வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.
Filed in: Food & Health, Health Tips

No comments yet.

Leave a Reply

You must be logged in to post a comment.